Thursday, May 14, 2009

என்னடா இது பொல்லாத வாழ்க்கை!

இந்தப் பதிவைப் படித்ததும் எனக்கு நிஜமாகவே இப்படித் தோன்ற, கேட்க வேண்டிய இடத்தில் கேட்டு விட்டேன். இதோ எனக்குக் கிடைத்த பதில்:

"ஹாய்,
நானும் இப்பதிவைப் பார்த்தேன். அப்படியே என் குடும்பத்தில் நடப்பதை படம் பிடித்துக் காட்டியது போல் இருந்தது. அவனுக்காவது ஒரு பெண்ணும் பிள்ளையும். எனக்கோ ரெண்டுமே பிள்ளைகள். இவர்கள் இருவரின் சண்டையைச் சமாதானம் செய்து வைப்பதற்குள் எனக்கு தாவு தீர்கிறது. குடும்ப பாரம் தாங்காமல் நான் இங்கே திருவோடு ஏந்தி நிக்கறேன். இவர்கள் எல்லாரும் அடுத்த வருஷ காலேண்டருக்கு இப்போவே போஸ் குடுத்து ப்ராக்டிஸ் பண்றாங்க.

நான் ஒண்ணும் கேட்கவும் முடியாது. உடனே கண்ணை உருட்டி, நாக்கை துருத்தி, "நான் ஆத்தா..... வந்திருக்கேன்" அப்படின்னு ஆரம்பிச்சிடுவா. அதுவும் இப்போல்லாம் கிராபிக்ஸ் வேற செய்யறா.

உடல் உபாதை? எனக்கு இல்லாததா? அறியாத வயசுல, தெரியாம யாரோ குடுத்த விஷத்தை லபக்கிவிட்டேன். அதை அப்படியே விட்டிருந்தா எப்பவோ dyssentry வழியா dispose ஆகி இருக்கும். அதைத் தடுத்து, ரெண்டும் கெட்டானா கழுத்துல நிறுத்தி, இப்போ எதைச் சாப்பிட்டாலும் ஒரே கசப்பு. கழுத்து மட்டும் தனியா robin blue போட்டப்பலே ஆயிடுத்து. (அதை மறைக்கத் தான் பாம்பு வளர்க்கவே ஆரம்பிச்சேன்).

அந்த கதைக்கு வருவோம். அவனாவது நாய் தான் வளர்க்கறான் .நான் ஒரு காளைமாடும் ஒரு பாம்பும். இதுல போன வாரம் பாம்புக்கு பல் வலி. சூலாயுதத்தால ரெண்டு பல்லையும் புடுங்கறதுக்குள்ள நான் பட்ட பாடு...
Atleast வாலை கெட்டியா பிடிச்சிக்கலாம் இல்லை? அதைக் கேட்டதுக்கு,"யாரப் பார்த்து வால் பிடிக்கறவங்கன்னு சொன்ன?" அப்படின்னு
ஒரே சாமியாட்டம்!
பேசாம நானும் ஒரு blog எழுதலாமான்னு பாக்கறேன்!

இப்படிக்கு
சிவன்"

1 comments:

சாய்ராம் கோபாலன் said...

அனு

சூப்பர். இங்கே ஆத்தாவே அம்மணமாக இருக்காங்கற மாதிரி தான்.

நாகேஷ் "கெளரவம்" படத்தில் நடிகர் நீலுவிடம் சொல்லுவார். "டேய், நான் ஒரு ஜோசியனை பார்த்தேன்". அவன் சொன்னான் "நீ அறுபது வயசுவரைக்கும் நாயா பேயா கஷ்டப்படுவாய், தெரு பொறுக்குவாய்" என்று சொல்லி நிறுத்தி.

அப்பறம் நீலு கேட்ட கேள்விக்கு "அதுவே பழகிடும் என்று சொன்னான் என்பார் ??"

அதை போல், என்னடா பொல்லாத வாழ்க்கை !!

- சாய்ராம்