Monday, May 18, 2009

இரங்கல்..

மீசை முறுக்கினான் பதுங்கினான் பாய்ந்தான்
ஓசையின்றி சேனை வளர்த்தான் - முதுகில்
அஞ்சிய பகைவன் தாக்கினும் மல்லாந்து மார்காட்டி
துஞ்சிய வீரனாம் கரப்பு.

ஆகாவென நாசம் புரிந்தான் ஒளிந்தான்
சாகாவரம் பெற்றானோ என - தேகமெலாம்
நஞ்சுக் குழம்பை தெளித்தும் போராடித்
துஞ்சிய வீரனாம் கரப்பு.

இம்மென்னும் முன்னே ஐநூறும் அருநூறும்
அம்மென்றால் ஆயிரம் பதுங்குழிகள் - இளைத்த
பிஞ்சிலே பழுத்த சேனை சிதறியோட தனித்து
துஞ்சிய வீரனாம் கரப்பு.


பொருள்:
நஞ்சுக் குழம்பை - BAYGON/HIT/MORTEIN and such other chemical weapons
பதுங்குழிகள் - potholes/ drains/pipes and such other underground safe havens

6 comments:

அப்பாதுரை said...

who is கரப்பு? Prabakaran?

Anu said...

I think the analogy (is it analogy?) applies to any member of any guerrilla outfit in any part of the world.

அப்பாதுரை said...

Who is கரப்பு then?
கரப்பு என்றால் அழித்தல் என்று தமிழில் ஒரு பொருள் உண்டு. "காப்பவை கரப்போன் கரப்பவை கருதாக் கடவுள்" என்றார் மாணிக்கவாசகர் திருவாசகத்தில். analogyயோ apologyயோ கரப்புனா என்ன அர்த்தம் சொல்லிடுமா - தூக்கம் வர மாட்டேங்குது.

geetha said...

i thought கரப்பு means cockroach. the first four lines nicely fits for the cockroach also.
anu, good attempt. --geedhu

அப்பாதுரை said...

அந்த கரப்பா? ஓகே, ஓகே.
அப்போ பாட்டு எல்லா வகையிலும் பொருத்தம் தான் - கரப்பான் பூச்சி has been around much longer than human beings - about 100 million years. எப்படியோ அழிவே இல்லாம இருக்குற species.

கரப்பான் பூச்சியைப் பத்திப் படிக்கும் போது ஞாபகம் வர ரெண்டு: 1) இரவில் கரப்பான் பூச்சிக்கு பயந்து லைட்டைப் போடாமலே குரோம்பேட்டை சமையல்கட்டைத் தண்டி பாத்ரூமுக்கு தடவித் தடவி நடந்து போனது. 2)பத்தாவதோ படிக்கும் போது in english non-detail (never understood why it was called non-detail, அதைத் தமிழ்ல வேறு நாடிடேல் நாடிடேல்னு மாத்தி.. கொடுமை) there was kafka's short-story 'metamorphosis', where the character transforms into a cockroach. படிச்சுட்டு பயத்துல ராத்திரி பாத்ரூம் போறதையே நிறுத்தினது.

சாய்ராம் கோபாலன் said...

அப்பாதுரை said...

"இரவில் கரப்பான் பூச்சிக்கு பயந்து லைட்டைப் போடாமலே குரோம்பேட்டை சமையல்கட்டைத் தண்டி பாத்ரூமுக்கு தடவித் தடவி நடந்து போனது"

அடப்பாவி நீ தான் அன்று என் மூஞ்சியில் மூச்சா இருந்தவனா ?

லீவுக்கு வந்தவனுக்கு என்ன மரியாதை