வேணும் எனக்கு! மெகா சீரியல்களை ஈவு இரக்கம் இல்லாமல் நக்கல் அடித்த பாவம். ஒரு கதையை ஆரம்பிப்பது சுலபம். அதைப் பேணி வளர்ப்பது எவ்வளவு கஷ்டம்! இனி எந்த அட்டு சீரியலையும் ஒரு அளவுக்கு மேல் நக்கல் அடிக்க மாட்டேன் என்று "உறுதி hooruhiren"
.................
புகையும் கூடி இருந்த கூட்டமும் யாரும் சொல்லாமலேயே இருளானின் வீட்டை அடையாளம் காட்டின. வாசலில் கருகிய உடல் போர்த்தப் பட்டு இருந்தது. ஒரு கிடா மீசைப் பெரியவர் "அடுத்து ஆக வேண்டிய காரியங்களுக்கு" உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார்.
பானு பெரியவரிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டாள்.
"வாங்க! இருளான் சொன்னான்! பாவம் சின்ன வயசு"
"முகத்தைப் பார்க்கலாமா?"
"பாருங்க!"
கழுத்து வரை துணி விலக்கி முகம் காட்டப் பட்டது.
"கோஷ்" என்று வினு வாய்பொத்தினான். பானு digicam இல் பதிவு செய்தாள்.
உள்ளே சென்று வீட்டைப் பார்வை இட்டனர். ஹால் , கிச்சன், படுக்கை அறை என்று மூன்றே அறைகள். சற்றே பெரிய வீடு.தீ அங்கங்கே அட்டகாசம் செய்திருந்தது.
அவர்களுடன் வந்த பெரியவர், "என் பேரு ராமர். தலையாரி." என்றார்.
" எப்படி நடந்ததுன்னு.."
"சமையல் உள்ளுளே கெரசின் கொட்டி இருக்குது."
படுக்கை அறையில் புத்தகங்கள் குவியலாக எரிந்து போயிருந்தன.அலமாரி திறந்து, துணிகள் எல்லாமும் சிதறி கருகி இருந்தன.
"Third-degree burns. நரம்புகளை நேரடியாக அழிப்பதால் வலியே தெரியாது , தெரியுமோ?"
"மேடம், ப்ளீஸ்! சகிக்கலை."
இருபது வீடுகளுக்கு மலையூரில் இடம் ரொம்பவே அதிகம். ஒவ்வொரு வீட்டை சுற்றியும் இயற்கை தோட்டம் அமைத்திருந்தது. எந்த வீட்டின் வாசலும் இன்னொரு வீட்டின் வாசலை நேருக்கு நேராக சந்திக்கவில்லை.
இருளானின் பக்கத்து வீட்டில் ஒரு பெண்ணும் அவள் மகனும் மட்டுமே இருந்தார்கள்.
"வெள்ளிக்கிழமை ராத்திரி ஊருல ஆம்பளைங்க எல்லாரும் கங்கை அம்மன் கோயில் போயிடுவாங்க. பொண்ணுங்களும், சின்னப் பிள்ளைங்களும் போறதில்ல. நாங்க ரெண்டு பெரும் வீட்ல தான் இருந்தோம். நடுநிசிக்கப் புறம் ஆளுங்க கோவில்ல இருந்து திரும்ப வர்ற சத்தம் தாங்க கேட்டுச்சு. வேற எந்த சத்தமும் கேக்கல. காலைல புள்ள பள்ளிக்கொடத்துக்கு கெளம்புச்சு. அப்பத்தாங்க பாத்தோம், வீட்டுக்கு உள்ளார ஒரே பொகையா வந்துச்சு."
"மணி என்ன இருக்கும்"
"ம்ம்.. அஞ்சு மணி இருக்கும்க."
இருளானின் வீட்டைச் சுற்றி இருவரும் நடந்து வந்தார்கள். "மேடம்! இந்த விபத்தை பத்தி எடிட்டர்கிட்ட சொல்லியாச்சா?" என்றான் வினு.
"விபத்தா? இதுவா? டோன்ட் பீ சில்லி" என்றாள்.
(தொடரும்)
Saturday, June 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
எழுதுவது ஒரு release. துண்டு துண்டாக எழுதினாலும் மொத்தமாக எழுதினாலும் it requires a certain commitment, regardless of the nature of outcome. பொறுமை, பொறுமை - it is coming out good.
Post a Comment