Wednesday, June 10, 2009

வைத்தியம் பார்க்கலையோ வைத்தியம்!!

ஒரு காலத்தில் ஜென்டூ பாம் தயாரிப்பாளர்கள் என்னவோ தாங்கள் தான் உலகில் உள்ள அத்தனை வியாதிகளையும் குத்தகைக்கு எடுத்த மாதிரி கூவி கூவி விளம்பரம் செய்வார்கள்:
"தலைவலியா? உடல் வலியா? ஜலதோஷமா?வேறு எதாவதா" என்று.

இப்போது எந்த வியாதியை எடுத்தாலும் அதற்கு ஜண்டு பாமுக்குப் போட்டியாக ஏகப்பட்ட பேர் வந்து விட்டார்கள்.
தலைவலியா? அலோபதி மாத்திரை. வேளைக்கு ரெண்டு. அதோடு இட்ஸ் கான். அப்புறம் அந்த மாத்திரையை சாப்பிட்டதற்குப் பிராயச்சித்தமாக வேறு ஒரு பத்து மாத்திரைகள் ஒரு வாரம் சாப்பிடவும்.

வேண்டாமா? பிடி ஹோமேயோபதி. ஓரு பொட்டலத்தில் லாகிரி வஸ்து போல் இருக்கும் ஒரு பொடியை அப்படியே உள்ளே தள்ளவும். அப்புறம் எறும்பு முட்டை மாத்திரைகளை ஒரு வருஷம் சாப்பிடவும். உங்களுக்கென்ன, உங்கள் பரம்பரைக்கே தலைவலி வராது.

வேண்டாமா? யுனானி? சித்தா? ஆயிர்வேதா? நாட்டு மருந்து?

எதுவுமே வேண்டாமா? புரிந்தது. "அல்டர்நெடிவ் மெடிசின்" காரரா நீங்கள்?

ரெய்கி : படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று சவால் விடுபவர்கள். இந்த டாக்டர்கள் உங்களை பரிசோதிக்க வேண்டாம். ஒரு மின்னஞ்சல் மூலம் தகவல் கொடுத்தால், இருந்த இடத்தில் இருந்தே எங்கோ இருக்கும் உங்களை குணப்படுத்துவார்கள். உங்களுக்கு சரியாகப் போகவில்லை என்றால், நீங்கள் சரியான முறையில் படுத்துக் கொள்ளவில்லை. உங்களுக்கு (கவனிக்கவும் :உங்களுக்கு) பயிற்சி தேவை என்று பொருள்.

யோகா: தலைவலிக்கு மருந்தும் ஆச்சு. "யோகா ரத்னா" என்று சர்டிபிகேட் கிடைசாப்பலையும் ஆச்சு! அதுக்கப்புறம் நீங்கள் குறித்த கட்டணத்தில் அடுத்தவர் தலைவலியைக் குறைக்கலாம். (உங்களுக்குத் தலைவலி போய் அடுத்தவர்க்குத் திருகுவலி ஆரம்பம்)

ஜெம்மாலஜி: "உங்கள் ராசிக்கு உகந்த கல்லை எங்கள் இடம் இருந்து வாங்கி அணியுங்கள். அப்படியும் வியாதி குணம் ஆகவில்லை என்றால் அந்தக் கல்லாலேயே எங்களை அடியுங்கள்"
என்று தினப்படி டி வியில் வியாபாரம் நடத்துபவர்கள்.

மேற்கண்ட எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் விளம்பரம் ஒன்றை சமீபத்தில் பார்த்தேன். செல் போன் தெரபி! விவரம் தெரிந்து கொள்ள குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டி இருந்ததால், blog எழுத இந்த விவரம் போதும் என்று விட்டு விட்டேன்.

இது தவிர, மணல் தெரபி என்றும் ஒன்று இருப்பதாக அறிகிறேன். மெரினாவுக்கு நீங்களும் உங்கள் வியாதியும் காற்று வாங்கச் செல்லுங்கள். அப்படியே ஒரு குழியை வெட்டிக் கொள்ளுங்கள். அந்தக் குழிக்குள் ஒரு அரை மணி நின்றால் வியாதி அப்படியே மண்ணுக்குள் போய்விடும்! நேற்று மெரினாவில் நான் கண்ட காட்சி இது!

என்ன ஆனாலும் பாட்டி வைத்தியம் போல் வரவே வராது. என் பாட்டி (அப்பாவின் அம்மா) க்குத் தலைவலி . என் பெரியப்பா முறையாக ரெய்கி கற்றவர். "நான் குணப்படுத்துகிறேன்" என்று கால் நீட்டிப் படுத்துக் கொண்டார். பாட்டிஇந்தக் கூத்தைச் சற்று நேரம் வேடிக்கை பார்த்தார். "இரு" என்று உள்ளே சென்று, ஐந்து நிமிஷத்தில் "இதச் சாபிட்டா அஞ்சு நிமிஷத்துல சரியாயிடும்" என்று இரண்டு டம்ளரில் ஏதோ திரவத்துடன் வந்தார். அது என்ன திரவம்? காபி!!

இது அல்லவோ வைத்தியம்!

4 comments:

அப்பாதுரை said...

You overlooked Vicks and Vaseline therapy.

சாய்ராம் கோபாலன் said...

Anu

Reminds me my medical rep days during 86-88 selling medicines.

Infact the first company was a surgical plaster company. The only use we had was to put it on our cricket bats to get the drive !!

All my cousins borrowed enough but I could never sell that to hospital to cheat them that it sticks !!!

Second was SMAK pharmaceuticals in Bangalore. The first salary cheque bounced and what do you expect me to do. I slapped the MD !!

Third was EROS Pharma in Bangalore working in Chennai. All my cousins / friends used to use the cough syrup samples when they could not lay their hands on alcohol !!

Best is a visit to a forest area in a mountain near Kudiyaththam. There was a quack (RMP - Registered Medical Practitioner) who worked as a compounder to a famous doctor in Chennai. He used to buy our cough syrup in bulk (like our big water cans) and give it in a tumbler who ever walks in (like Nagesh giving medicines in Ooty Varai Uravu) and he will also give tablets in all color (சிவப்பிலே, மஞ்சள், பச்சை, A Complex, B Complex, C Complex.....ஒய், என்னய்யா problem, காம்ப்ளெக்ஸ் இல்லாம போடுயா.)

He used to give Pencillin to any one who walks in and I was there one of the day walking all the way to the mountain to take order for my cough jars !! He gave Pencillin to a person and that guy collapsed immediately.

The so called RMP was asking me to stay back "சாய், கொஞ்சம் இருங்க. நான் பிடித்தேன் ஓட்டம். என்னை நொங்கு எடுக்கவா ?

- Sairam

geetha said...

my mother used to have only two medicines - vicks and coconut oil for all the problems. now i have a cupboard full of medicines for vaibhavi and realised that my mom is wiser!!!---geedhu

அப்பாதுரை said...

geetha.. it was vaseline.
"andha vasalina thadavu sariya poidum"
"emma pasikkuthungaren, vasaline thadava solriye?"