இந்த ஜைனத் துறவி போட்டோ பிளாஸ்டிக் சர்ஜரிக்குப் பின் எடுக்கப் பட்டது போலும்! ஜக்சனுக்கும் அவர் டாக்டருக்கும் நடந்த உரையாடல்:"என்ன இது! மூக்கு எங்கே?"
"இந்த சாக்கு மூட்டைக்குள்ள பத்திரமா இருக்கு. கவலைப் படாதீங்க. இப்போதான் மிச்ச சொச்சத்தை ஒய்ட் சிமென்ட் போட்டு அடச்சிருக்கோம்."
"இப்போ மூச்சு எப்படி உடறது?"
"மூச்சு ? மூக்கிலே ரெண்டு ஓட்டையையும் பென்சிலாலே தான் எழுதி இருக்கேன். மூச்சு விடறத்துக்கு மூக்கு எதுக்கு? அதான் இவ்வளவு பெரிய வாய் இருக்கே? உங்களுக்கு மூச்சு முக்கியமா? மூக்கு முக்கியமா?"
"இதுக்குத்தான் பணம் வாங்கினியா?"
"என்ன! இப்படி மூக்கு மேல கோவம் வரது உங்களுக்கு! ஜாக்கிரதை! அப்புறம் மூக்கு உருகிடும்!"
"இந்த மூக்கை வெச்சு நான் என்ன செய்றது?"
"ஏன்? இப்பவும் மூக்கு பிடிக்க சாப்பிடலாம். மூக்கு மேல விரல் வெச்சு ஆச்சர்யப் படலாம். ஆனா பாத்து சுண்டு விரல மட்டும் வைங்க!"
"டாக்டர்! இந்த விஷயம் காதும் காதும் வேச்சாப்பலே நமக்குள்ளே இருக்கட்டும்!"
"காதுன்னதும் தான் நினைவுக்கு வரது! கத்தியை உங்க மூக்கிலே வெச்சதுமே, சென்னை கார்பரேஷன் ஸ்கூல் கட்டடம் மாதிரி மூக்கு பொலபொலன்னு உதிர்ந்து விழுந்துடுத்து! ஒட்டுப்போட ஒண்ணுமே இல்லாததாலே, காதைக் கிழிச்சி தான் மூக்கிலே தையல் போட்டிருக்கு. கொஞ்ச நாளைக்கு எந்த ரஹஸியமா இருந்தாலும் இடது காதை குடுக்காதீங்க!"
"அப்போ அந்தக் காது?"
"கேக்-காது!"இந்தப் படத்தை பக்கத்து வீட்டுப் பெரியவரிடம் காட்டினேன். தடால் என்று எழுந்து நின்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
ஜாக்சன் மட்டும் அப்போது இந்தியாவில் இருந்திருந்தால் அவருக்கு வடை மாலை சார்த்தி, வாயிலே வெண்ணைக் காப்பு வைத்து, வாலிலே (இல்லாவிட்டால் தொலைகிறது, காலிலே) கீழிருந்து மேலாக குங்குமப் பொட்டு வைத்திருப்
பார்கள். அவருக்குக் கொடுத்து வைக்கலை!அது சரி! மூக்கு பெரிசா இருந்தா ஏன் சின்னது பண்ணனும்? நம்ம சோஹா அலி கான் இல்லையா? சிலருக்கு மூக்கு பெருசா இருக்கும். சோஹா மாதிரி சிலருக்கு தும்பிக்கை சின்னதா இருக்கும். அதப் பத்தி எல்லாம் மேடம் கவலையே படலையே ?
நமக்குத் தெரிஞ்ச ஒருத்தர் கூட தும்பிக்கை கேஸ் தான். அவசரத்துக்கு சாக்ஸ், கர்சீப் எல்லாம் கூட மூக்கிலே கிளிப்பைப் போட்டு காய வைத்துக் கொள்வார். இருட்டிலே குட்டி டார்ச் லைட்டை மூக்கிலே பிக்ஸ் பண்ணிவிட்டு கை வீசி நடப்பார்! ஆபீசிலே இவர் தூங்கும் போது பென் ஸ்டாண்ட் என்று நினைத்து நாசித் துவாரத்தில் எல்லாரும் அவரவர் பேனாவை சொருகி வைக்க, எல்லாத்தையும் பத்திரமா வீட்டுக்கு சுருட்டி வந்து விட்டார்!
இவ்வளவு சௌரியம் இருக்கு! எதுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி?
2 comments:
Pretty interesting one. narrated with lots of fun sprinkled in a nice way. Go on...
- Partha
mookkin kathai suvaasamaaga adhaavadhu suvaasarasiyamaaga irukku. vishayam theriyuma. US government order. Michela cremate pannakkodaathu, atmosphere pollute ahum. adhannala recycle pannanumnu. mookkila kilip pottu thuni kaaya vachchathu super special. vaazhga! valarga!
Post a Comment