Saturday, August 15, 2009

ஆஸ்கார் வாங்கும் பிள்ளையார்!


நாளைய செய்திகள்!

வணக்கம்! பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகமெங்கும் ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கின்றன. காவல் துறை ஆயத்த நிலையில் இருப்பதாக முதல்வர் தெரிவித்தார். சந்தேகத்துக்கு இடமளித்த 1000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 300 போலீசார் தமிழகத்தில் குவிக்கப் பட்டுள்ளனர். பத்தாததற்கு ராணுவமும், C.B.C.I.D ஐச் சேர்ந்த 200 போலீசாரும், 200 துப்பறியும் நாய்களும் சென்னையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று பிள்ளையார் சதுர்த்தி ஏற்பாடுகளைக் குறித்துப் பேசிய முதல்வர், பிள்ளையார் பிறந்த தினத்தை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தேங்காய் உடைப்பது, சூடம் ஏற்றுவது போன்ற அராஜகச் செயல்கள் மூலம் சிறுபான்மைச் சமூகத்தின் மனம் புண்படும்படி நடந்திட்டிடக் கூடாது என்றார். மேலும், "பிள்ளையார் என்று ஒருவர் உண்மையில் இன்று பிறந்தாரா? எந்த பிரசவ ஆஸ்பத்திரியில் பிறந்தார்?" என்றும் கேள்வி எழுப்பினார்.

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த செல்வி ஜெயலலிதா, இந்த நன்னாளில் கேடு கெட்ட கலைஞர் ஆட்சி முடிந்திட வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கும் படி தொண்டர்களுக்கு ஆணையிட்டார்.
தன் ஆட்சிக் காலத்தில் பிள்ளையார் பால் குடித்ததை நினைவு கூர்ந்த அவர், "கருணாநிதி ஆட்சியில் பிள்ளையார் பால் குடிக்க மறுப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். "இது குறித்து ஆராய விசாரணைக் கமிஷன் வைக்க இந்த அரசு தயாரா?" என்றும் சவால் விடுத்தார்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்துச் செய்தியில், "தமிழகத்தில் 12,54,674 பிள்ளையார் கோவில்கள் உள்ளன. அதில் கொழுக்கட்டை விநியோகிக்கும் கோவில்கள் 23,567 . மற்ற கோவில்களில் ஏன் கொழுக்கட்டை தரப் படவில்லை? மக்களை ஏமாற்ற முடியாது. எனக்கு கொழுக்கட்டை பிடிக்கவும் தெரியும். கொழுப்பு பிடிச்சவங்களை அடிக்கவும் தெரியும். ஆ..ந்ன்!" என்று கூறினார்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தனது வாழ்த்துச் செய்தியில் பிள்ளையாரை நம்புவது பகுத்தறிவற்ற செயல் என்று குறிப்பிட்டார். மேலும், பிள்ளையாரை "பிள்ளையான்" என்று அழைப்பது தான் பகுத்தறிவு என்று விளக்கம் அளித்தார்.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி,தமிழ்நாட்டில் தேங்காய்கள் எதோ ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம் மூலம் தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகக் கூறினார்.

இந்தக் காமெடியை தான் ஏற்கனவே ஒரு படத்தில் செய்து விட்டதாகவும், சுப்பிரமணிய சாமி காப்பி அடிக்கிறார் என்றும் கவுண்டமணி காரசாரமாக பேட்டி அளித்துள்ளார்.

பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இடுப்பில் ஈரத் துணியுடன் தலையில் பிள்ளையாரைச் சுமந்த படி டான்ஸ் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தொண்டர்கள் நாள் முழுதும் தோப்புக் கரணம் போடும் சிறப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.

சென்ற ஆண்டு கிரிக்கெட் ஆடும் பிள்ளையார், கம்ப்யூட்டர் பார்க்கும் பிள்ளையார் போன்ற பொம்மைகள் செய்யப்பட்டன. இந்த ஆண்டும், காலத்துக்கு ஏற்ப, ஆஸ்கர் வாங்கும் பிள்ளையார், விடுதலைப் புலி பிள்ளையார், பவர் ரேஞ்சர் பிள்ளையார், டாட்டூ அணிந்த "யூத்து" பிள்ளையார் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

வணக்கம்!

.............

பிள்ளையார் தனக்குத் தானே பாடிக் கொண்டார்: "ஏன் பிறந்தாய் மகனே...ஏன் பிறந்தாயோ?"

2 comments:

அப்பாதுரை said...

Blissful farce, Anu. Blissful.

குரோம்பேட்டை உயர்நிலைப் பள்ளி நாட்களில் ஒரு தமிழ் ஆசிரியர் நினைவு வருகிறது. (ஸ்ரீராமுக்குப் பிடித்த வாத்தியார். அவர் அந்தப் பக்கம் வந்தால் இவன் இந்தப் பக்கம் ஓடி விடுவான் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.) தமிழ் வாத்திக்கு கடவுள் பிடிக்காது. கடவுள் இல்லை என்று நிறைய தமிழ் வாத்திகள் சொன்னாலும், இவர் மட்டும் தான் கடவுள் பிடிக்காது என்று கொடி பிடிப்பார். "இன்னிக்கு சாப்பாட்டுல ஒரே சாமிபா" என்பது அவருடைய காபிரைட் வசனம். அவர் சொன்ன பிள்ளையாரு கதை இதோ:

"பிள்ளையாரு" என்ற சொல்லில் "பிள்ளை" "யாரு" என்ற சொற்களைப் பிரித்து 'தகப்பன் யார்?' என்ற முறையில், மனிதனைப் போல் தோற்றமளிக்காத பார்வதியின் பிள்ளையைப் பற்றி சிவன் கேட்டதாகவும் அந்த சமயத்தில் பார்வதி நைசாக public relations coup செய்து தன் private indescretionsகளை மறைத்து விட, உடன் இருந்த கணங்கள் பூதங்கள் எல்லாம் சிவனை "வால்க வால்க பிள்ளையாரு பிடித்த சிவனே வால்க வால்க" என்று வாழ்த்தினராம்.

பிள்ளையார் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஐம்பது வருடம் life கொடுக்கிறேன். Hopefully reason would prevail by then. அதற்குள் நாம் திருந்தி இது போன்ற மூட பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்போம் என்று நினைக்கிறேன். இந்த மூட நம்பிக்கை ஒழிவதற்காக ஒரு தேங்காய் உடைக்கவும் தயார். (சா ருக் கானைப் பிடித்த செக்யூரிடியை அழைத்து முதலில் தேங்காயை செக் செய்யச் சொல்லி விட்டு, பிறகு உடைப்பேன்.) Didn't realize kaundamani was capable of such wit.

TAMIZHANBAN said...

Super!Super! Good Satire. Keep up with full gas!