Thursday, September 3, 2009

ஜாக்கிரதை!!

இன்று இரவு எட்டு மணிக்கு சென்னையில் இருந்து போன்.

அம்மா:
"அனு! அங்கே யாரையோ ஹெலிகாப்டர் ஏத்தி கொன்னுட்டாளாமே? எங்களுக்கெல்லாம் நாளைக்கு லீவு!"

"என்னா??"

"நீ அந்த ஊர்ல தானே இருக்கே? தெரியாதா? சரி! ஜாக்கிரதை! பிளாகெல்லாம் எழுதாதே!"

மழை நாள் என்பதால் போனில் வழக்கத்துக்கு அதிகமான பின்னணி இசை.
அதையும் தாண்டி, நான் பேசியது அம்மாவுக்கு புரிந்ததோ இல்லையோ? எதற்கும் தெளிவு படுத்துவோம் :


"Killed in copter crash" என்றால் ஹெலிகாப்டர் ஏத்தி கொன்னுட்டா ன்னு அர்த்தம் இல்லை.

இறந்தது யாரோ இல்லை - ஆந்திர முதல்வர்.
(இல்லை- என்.டி ராமாராவ் இல்லை!)

ஹெலிகாப்டர் என்பது பறக்கும் வஸ்து. நடப்பன, ஊர்வன - இந்த ஜந்துக்களை எல்லாம் ஹெலிகாப்டர் ஏத்தி கொல்வது இல்லை.

பிளாக்? வலை உலகில் 0.00125% பேர் (உபயம்:websiteoutlook.com) மட்டுமே பார்க்கும் என் சோதா பிளாகை என்னவோ ஹிந்து, எக்ஸ்ப்ரெஸ் ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டாயே?

இன்னும் ஹெலிகாப்டர் ஏத்திக் கொல்லும் அளவுக்கு எல்லாம் நான் வளரலை, கவலை வேண்டாம்.

3 comments:

அப்பாதுரை said...

sad.

didn't ntr die long ago?

சாய்ராம் கோபாலன் said...

அப்பாதுரை said...
sad.

didn't ntr die long ago?

துரை

நீ இந்த ஊரில் (அமெரிக்காவில்) ரொம்ப நாள் இருக்கே தெரியும் அதுக்காக NTR போனது தெரியாது என்பது போல் நடிப்பது ரொம்ப ஜாஸ்தி !!

- சாய்ராம்

சாய்ராம் கோபாலன் said...

அம்மா: "அனு! அங்கே யாரையோ ஹெலிகாப்டர் ஏத்தி கொன்னுட்டாளாமே? எங்களுக்கெல்லாம் நாளைக்கு லீவு!"

லதா,

நீ பள்ளியில் வேலையில் இருப்பதனால் மட்டும் இல்லை, நம் ஊரில் கருணாநிதி நமீதா செத்தாலும் விடுவார்