முந்தா நேத்து பெய்த மழையில் நேற்று மூழ்கிய கர்னூல் டவுனை நியூசில் பார்த்தேன்.
இவ்வளவு நாளா நாட்டில் ஒரே வறட்சி, மக்கள் எல்லோரும் நாக்கு உலர்ந்து கிடக்கிறார்கள்,பயிர்கள் எல்லாம் வாடிப் போய் சருகாகி விட்டன என்று நியூசில் சோக கீதம் இசைத்து வந்தார்கள். மழை வர வேண்டும் என்று எங்கும் வேண்டுதல்!
இரண்டே நாள் தலையைக் காட்டியதில், மழை இப்போது எல்லோருக்கும் எதிரி ஆகி விட்டது.
இரண்டு நாள் மழைக்கு பயிர்கள் நாசம், நூறு பேர் சாவு, மிச்சம் உள்ள மக்கள் boat ஏறி ஆபிஸ் போகிறார்கள் (கர்ம வீரர்கள்!), பள்ளிகள் வழக்கம் போல் விடுமுறை.
இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் கதைதான். இரண்டு நாள் மழையைக் கூட தாங்க முடியாத infrastructure ஐ வைத்துக் கொண்டு, "மாசம் மும்மாரி பொழியலையே?" என்ற அங்கலாய்பெல்லாம் நமக்கு தேவையா?
இதுல கலி முத்திப் போச்சு, கத்திரிக்காய் முத்திப் போச்சு என்ற "analytical reasoning" வேற!
உண்மையில் முற்றிய கலிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இல்லன்னா, நாட்டில் மும்மாரிப் பொழிந்து, நாட்டையே பூதக் கண்ணாடி வைத்துத் தேட வேண்டி இருந்திருக்கும்!
ஜெயமோகன் புத்தகங்கள் கிழக்கில்
10 hours ago
1 comments:
"ஒரு ஊர்ல ஒரு மயி!"
மயி - Mattum Dhanae !!
- Sairam
Post a Comment