Friday, October 16, 2009

இனி எல்லாம் சுகமே..

நாலு நாளா வீட்டிலே தண்ணி வரலை.
நாலு நாளா நெட் கனெக்சன் இல்லை.

ரெண்டுக்கும் என்ன சம்பந்தமா?

நமக்கு எந்த பிரச்சனையா இருந்தாலும் கூகுள் பண்ணி பார்த்தால் தான் திருப்தி.
குழாயிலே தண்ணி வரலையா? "Water Problem" ன்னு கூகுள் பண்ணி ஏழு லக்ஷம் சொச்ச results இல் நாலையாவது ("உகாண்டாலே குழாயே இல்லையாம்!") மேயணும்.

இல்லையா? அவரவர் blog இல் போய் புலம்பி இருப்போம் ("தண்ணீர்! தண்ணீர்!").
அதுக்கு கமென்ட் வருதான்னு நாள் முழுக்க நாக்கை தொங்க போட்டு பார்த்திருப்போம்.

இல்லாட்டா சேட் பண்ணி பிரச்சினையின் தீவிரத்தை அலசி ஆராய்ந்திருப்போம். இப்படி:

Me: No water here..
You: oh
Me: Buying Bisleri
You:Cool..
Me: What else
You:Nothin
Me: Take care
You:Same to you
Me: Bye
You:Bye
....
....
....

அதுவும் போதாதே? Facebook சுவற்றில் "நாலு நாளா குளிக்கலை" என்று கிறுக்கி படிப்பவர்களை கடுப்பேற்றுவோம்.

அப்புறம் .. டுவிட்டரிலே "Water Water everywhere, not a drop to drink.."(மனசிலே ஷஷி தரூர்னு நினைப்பு!) ன்னு பேத்தி ஆறுதல் அடைந்திருப்போம்.

சரி, போகட்டும். இன்னும் தண்ணி வரலை. ஆனா நெட் வந்தாச்சு.
அப்ப்..ப்பா..டி!

Water

0 comments: