Saturday, October 17, 2009

காசு மேல காசு வந்து..

வர வர Facebook இல் "காசு "(CAUSE) தொல்லை தாங்கலை!
(ம்ம்..மறுபடியும் Facebook பற்றிய புலம்பல்!)

கால் காசு பெறாத "cause" க்கு எல்லாம் அவனவன் சப்போர்ட் கேட்டு வர்றான்.

உ: Farmville என்ற விளையாட்டில் இந்தியக் கொடி இல்லையாம். அதுக்காகப் போராட்டம் நடத்துறாங்களாம். இந்த "cause" க்கு ஆதரவு கேட்டு ஒரு விண்ணப்பம்!

இந்த கொடி காத்த குமரர்கள் எல்லாம் கிடைத்த சான்ஸில் அமெரிக்கா போய் செட்டில் ஆகி, இந்திய மண்ணை மிதித்தே பல வருஷம் ஆகி இருக்கும். உள்ளூரிலே இருந்த போதே சுதந்திர தினத்துக்கு கொடி ஏத்தினது இல்லை. லட்டு சாப்பிட்டதோட சரி!
இப்போ திடீர்ன்னு இந்தியக் கொடியை ஏத்தியே ஆகணும்னு ஒரு வெறி.
Farmville காரர்கள் ஏதோ ஒரு கொடியைக் காட்டி இது இந்தியக் கொடியே தான்னு அடிச்சு சொன்னாப் போதும். காசு குளோசு!

இந்தக் "cause" ஐ காசாக்கும் வேலை Facebook இல் ரொம்ப மும்முரமாக நடக்கிறதோ?

வேற என்னென்ன காசு இருக்குன்னு ஒரு நோட்டம் விட்டேன்.

பெரும்பாலானவை ஒரு தோத்தோ நாயின் படம் போட்டு "பிராணிகளைக் காப்போம்", "நாய்ச் சண்டையை நிறுத்துவோம்" (எப்படி? சண்டை போடும் நாய்களுக்கு நடுவுலே போய் விழவா?) என்று கூவின.

இல்லையா, ஒரு "என்பு தோல் போர்த்த உடம்பைக்" காட்டி ஹைதியைக் காப்போம், சொமாலியாவை வளர்ப்போம் என்று அழைத்தன.

"சோனியாவின் கனவை நனவாக்குதல்" அப்படீன்னு ஒண்ணு!
ராகுல் காந்தி ஆரம்பிச்சதோன்னு பார்த்தால் இது அந்த சோனியா இல்லை!

சரி, சோனியாவுக்கு என்ன கனவு? ஆயிரம் பேர் சேர்ந்து ஐயாயிரம் டாலர் வசூல் செஞ்சிருக்காங்களே!

இன்னும் ஒண்ணு:
Support Moshe the Orphan Son of Rabbi Gavriel and Rivka Holtzberg / Rebuild Chabad in Mumbai

உங்களுக்கு புரிஞ்சா சரி!

நாமும் ஒரு காசை ஆரம்பிச்சு நாலு காசு பார்த்தால் என்ன?

5 comments:

அப்பாதுரை said...

வெயில்ல நின்னு நின்னு காஞ்சு போய் கடைசிலே ஒரு சின்ன சாக்லேட் கிடைக்கும். சுதந்திர தினத்துக்கு லட்டா? யார் கொடுத்தாங்க? எப்போ கொடுத்தாங்க? எனக்குத் தரவேயில்லையே?

சாய்ராம் கோபாலன் said...

அப்பாதுரை said...

"சுதந்திர தினத்துக்கு லட்டா? யார் கொடுத்தாங்க? எப்போ கொடுத்தாங்க? எனக்குத் தரவேயில்லையே?"

துரை, அனு ஏற்கனவே நம்மை நொங்கு எடுக்கறா (வெளிநாடு வந்த நம்மை !!) நீ வேற ?

Anonymous said...

Nongu Yedukkarthu, Danguvar Arukarthu
Ithallam yenna?

Anu said...

yen? mersal aagitteengala?

சாய்ராம் கோபாலன் said...

Anonymous said...

Nongu Yedukkarthu, Danguvar Arukarthu Ithallam yenna?

Reminds me "Avvaiyae, idhu endraal yenna, adhu endraal yenna ?"

- Sairam Gopalan