Sunday, October 4, 2009

Neither Domestic, Nor a Help!

என்னவோ தெரியலை, எனக்கு வேலைக்காரிகள் விஷயத்தில் எப்போதும் தகராறு தான். இத்தனைக்கும் நான் அப்படி ஒன்றும் "கெடுபிடி" இலலை.Quite the opposite.

முதன் முதலில் என் வீட்டில் வேலை செய்த பெண் "தொழிலில்" ரொம்ப சுத்தம். வேலை செய்த சுவடே தெரியாது, ஆனால் வீட்டு பொருட்கள் மாயமாய் மறைந்திருக்கும். கடைசியில் ஒரு நாள் வீடே "doond thei reh jaavoge" கேஸ் ஆகி விடும் முன், ஆள் மாற்றினோம்.

அடுத்து வந்த தொண்ணூறு வயசு கிழம், ஒரு நாள் வேலை செய்தால் நாலு நாள் படுத்து விடும்.

அதுக்கப்புறம் ஒரு "தில்லான மோகனாம்பாள்" வந்து சேர்ந்தாள். ஒரு மாசம் வேலை செய்து, "ஒரு ஐந்நூறு இருக்குமா? நாலே மாசத்தில் தந்துடுவேன்" என்று கண்ணைக் கசக்கி, பணத்தை வாங்கிய பின் தான் கிளம்பினாள். அடுத்த நாளே பார்ட்டி ராவோடு ராவாக வீட்டைக் காலி செய்து எஸ்..கேப்!

அதுக்கப்புறம் வந்த ராக்கம்மா ஒரு அலாதி கேஸ். இவளுடைய பாட்டிக்குப் பாட்டி தான் அந்தக் காலத்தில் புலியை முறத்தால் அடித்து விரட்டியது. "வந்துங்க .. அதாவதுங்க .. நீங்கங்க இனிமேல் வர வேண்டாமுங்க.." என்று எட்டி நின்று சொல்லி முடித்தேன்.
அவள் உடனே "தேரா மன்னா..செப்புவது உடையேன்.." என்று தெலுங்கில் ஊரே கேட்கும்படி நியாயம் கேட்க, " no..no..காது..நஹி.." என்று எனக்குத் தெரிந்த பாஷையில் எல்லாம் என்னவோ சொல்லி, சமாதானக் கொடியை ஏற்றி ஒரு வழியாக அனுப்பி வைத்து அடுத்த எபிசோடுக்குத் தயாரானேன்.

இத்தனைக்கு அப்புறமும் ஏன் வேலைக்கு ஆள் வெச்சுக்கணும்?
"எவ்வளவு ஏழரையைக் குடுத்தாலும் தாங்கறா. இவ ரொம்ப நல்லவ.."ன்னு சொல்லிட்டாங்களே!!

1 comments:

meenakshi said...

வேலைக்காரி அமையறதுக்கு ரொம்ப கொடுத்து வெச்சிருக்கணும். இந்த விஷயத்துல நான் ரொம்பவே கொடுத்து வெச்சவளா இருந்தேன். எங்க வீட்டுக்கு வந்து வேலை செஞ்சவங்க எல்லாருமே ரொம்ப, ரொம்ப நல்லவங்களா இருந்தாங்க. வீட்டுக்கு யாரவது விருந்தாளி வரப்போறாங்கன்னு பேச்சு வாக்குல சொன்னாலே போதும், அவளே ரெண்டு வேளையும் வந்து எல்லாம் உதவியும் செஞ்சு, நானா 'நீ கிளம்பு, போறும்னு' சொல்றவரைக்கும் கூடவே இருப்பா. ம்ம்ம்ம்ம், அதெல்லாம் ஒரு காலம்.