இதைப் படிக்கவும்:தீபாவளிப் பிரச்சினை
எனக்கு ரொம்ப நாளாவே Food Bloggers மேல ஒரு காண்டு. இருப்பதிலேயே food blogging க்கு ஒரிஜினாலிடி தேவை இல்லை. அம்மா/பாட்டி/ சமையல்காரர்/ சக பிளாக் - இப்படி யாராவது மண்டபத்துல எழுதிக் கொடுத்ததை இவங்க பிளாகிலே போட்டு , அவார்டுகளை அள்ளறாங்க!
எல்லா food bloggers சும் "இதோ ரெசிப்பீ ரெடி. கைல எடுத்து வாயிலே போட்டுக்கோங்க" என்பதோடு நிறுத்திடுறாங்க. நல்லா வந்தா வாயிலே போடலாம்,வராட்டா என்னா செய்றது?
இந்த ரகசியத்தை எந்த f.b யும் சொல்லாததால், நான் இந்த சேவையை செய்யலாம்ன்னு நினைக்கிறேன்.
இந்த மோகண்டாலை எடுத்துக்கோங்க, அதை கஷ்டப்பட்டு கிண்டி, கிளறி,குத்தி, பேர்த்து, தூர்வாரி அப்புறம் ஏன் தூக்கிக் கொட்டணும்? இப்படி ரீமிக்ஸ் பண்ணலாமே?
1. மோகன்பால்: கத்தியால வெட்ட வரலையா? அப்போ அகிம்சை வழியிலே போயிடுவோம். மோகண்டாலை உருட்டி டிரேயிலே மோகன்பாலாக வைக்கவும். (மிருதுவா இருந்தா மோகன்பால். கொஞ்சம் கடினமா இருந்தா மோகன்பாம்.)
௨. மைக்-மோகன் டால்: உருண்டைக்குக் கீழே குச்சிகளை சொருகவும். உருண்டைகளை கலர் பேப்பரில் சுற்றவும். நம்பி வரும் விருந்தாளிகள் கையில் "லாலிபாப் ஸ்வீட், எங்க வீட்டு ஸ்பெசல்" என்று அடித்து விடவும்.
3. மோகன்-ஜாம்: கடாயிலே இருந்து பெயர்த்து எடுத்து அவனிலே ரெண்டு நிமிஷம் வைக்கவும். இதுதான் மோகன் ஜாம். இதை பிரெட்டுக்கு நடுவிலே பதுக்கி, "ஹோம் -மேட் ஜாம்" என்று வர்றவங்க வாயிலே திணிக்கவும். அப்படியே வாயடைச்சுப் போயிடுவாங்க!
நீங்கள் இந்தியாவில் இருந்தால், இந்த ரீமிக்ஸ் ஸ்வீட்டுகளை dispose செய்ய சில வழிகள் உள்ளன:
1. எலிப்பொறி: மோகண்டால் எலியை பிடித்தாலும் ஓகே.எலிக்கு மோகண்டாலைப் பிடிக்காட்டாலும் ஓகே. மறுநாளே வெளிநடப்பு செய்திடும்.
2. பண்டிகை இனாம் என்று தலையை சொறிந்து கொண்டு நிற்கும் பால்காரர்/ வாட்ச்மேன்/இத்தியாதிப் பேர்க்கேல்லாம், "கட்டாயம் ஸ்வீட் எடுத்துக்கணும்" என்று 50 ரூபாய் இனாமுக்கு 50 கிராம் மோகண்டால் என்று காலி செய்து விடலாம்.
இதிலே நமக்கு ஒரு லாபம்: அடுத்த பண்டிகைக்கு இனாம் கேட்க மாட்டார்கள். ("ஐயோ! அந்தம்மா ஸ்வீட்டக் குடுப்பாங்களே!")
ஆனால் கீதா, டூ லேட்! நீங்க தான் எல்லாத்தையும் கொட்டிட்டீங்களே!
பரவாயில்லை! கார்த்திகைக்கு பொரி சரியா வரலைன்னா என்கிட்டே சொல்லுங்க. உங்க பொரிய வெச்சு கணிப்பொறியே பண்ணிடலாம்!
ஜெயமோகன் புத்தகங்கள் கிழக்கில்
10 hours ago
7 comments:
mohan bomb !? super
anbulla ladha
athellam seri. what is mogandal?
never heard of it
meena
/*athellam seri. what is mogandal?
never heard of it
meena*/
Read the first line.
Vedha
mohan bomb..இந்த ஸ்வீட்டை(?!!)ரம்ஜான் அ பக்ரீத் பண்டிகைக்கு வைத்துக்கொள்ளலாம்..will be apt.
** athellam seri. what is mogandal?
never heard of it
meena**
meena , மோகன் டாலெல்லாம் பெரிய்ய்ய ரேஞ்சுங்௧..நல்லா யோசிச்சி எறங்குங்க..
/meena , மோகன் டாலெல்லாம் பெரிய்ய்ய ரேஞ்சுங்௧..நல்லா யோசிச்சி எறங்குங்க../
Geetha: "vaayila irukkaradhu cigarette illa... pattaasunnu mudhalleye yaaraavadhu sollak koodaatha.."
mohan bomb..
is this before or after?
I know only MohanLal. Who - sorry what is this Mogandal? Ha! Ha! Ha! Moongdal mogandal aayidichchu. Pogattum, neethaan ini sariyaana aalu, recipe solla, paththa vai, athu mela paththaraththa kuththa vai, ooththu, kelaru, kalakku, naanga ellam unakku pul supportu.
Post a Comment