ஒரு மாசம் முன்னால் ஒரு நாள் மாலை டி.வியை ஆன் பண்ணினேன். "ஆ..கஸ்தூரி...போயிட்டியே...பப்ப்பூ" ன்னு ஒரு குடும்பமே அழுது கொண்டிருந்தது. அப்பாடா! ஒரு வழியா முடிஞ்சா சரின்னு நெனச்சேன்.
நேத்து பாக்கறேன், அதே கஸ்தூரி சீரியலில் யாரோ ஒரு ஆள் கோயிலிலே உட்கார்ந்து, சுத்தி இருக்குற மரம், செடி, கொடி, ஐயர் எல்லாத்தையும் காக்கா மசால்வடயப் பாக்கறா மாதிரி "ஒரு ஆங்கிள்"ல பாத்துக்கிட்டிருக்கார். ஆஹா! புரிஞ்சி போச்சு. சாருக்கு "பழசெல்லாம் மறந்து போச்சா"? இத வெச்சே ஒரு வருஷம் ஓட்டுவாங்களே?
அடுத்த வருஷம் இதே நேரம், இதே ஆள் லாரிலே அடி பட்டு ஆஸ்பத்திரிலே கெடப்பாரு. எழுந்த உடனே, "பழசெல்லாம் நினைவுக்கு வரும்".
இப்படியே கஸ்தூரி முடியும், ஆனா முடியாது.
சீரியல் தான் இப்படீன்னா, சன் டி.வில எல்லா நிகழ்ச்சிகளுமே பல வருஷமா status quo வை அப்படியே காப்பாத்தி வருகின்றன.
இன்னமும் "அசத்தப் போவது யாரு"ன்னு வாரா வாரம் அதே பத்து பேர் அதே ஸ்டேஜுக்கு வந்து, அதே மாதிரி வரிசையா ஜோக் சொல்லறாங்க. வாராவாரம் இந்த ஜூவைப் பார்க்க ஒரு கெஸ்ட் வேற! அவரும் "அசத்தப் போவது பாக்காம நான் தூங்க மாட்டேன், சாப்பிட மாட்டேன், பல் தேய்க்க மாட்டேன்" ன்னு அதே மாதிரி பல்லவி! "அசத்தின வரைக்கும் போதும்,போய் புள்ளைங்களப் படிக்க வையுங்க"ன்னு என்னைக்குத்தான் அனுப்பப் போறாங்களோ!
இந்த ஷோ வில் சின்னப் பையனா அறிமுகம் ஆன ராமகிருஷ்ணனுக்கு இப்போ மீசையே முளைத்து விட்டது.
இந்த போகிக்காவது பழசயெல்லாம் தூக்கிப் போடுங்கப்பா!
ஜெயமோகன் புத்தகங்கள் கிழக்கில்
10 hours ago
8 comments:
"இந்த ஷோ வில் சின்னப் பையனா அறிமுகம் ஆன ராமகிருஷ்ணனுக்கு இப்போ மீசையே முளைத்து விட்டது."
அவரே ஒருநாள் கெஸ்ட் ஆகா வரவேண்டாமா !!
இந்த போகிக்காவது பழசயெல்லாம் தூக்கிப் போடுங்கப்பா!
சூப்பர் அனு
dear anu,
serial il kakka masalvadaya parkra aasami madhiri, andha serial parkarvargalum marinalum serialai mudikka mattargal.
amma
எஸ்.வீ. சேகர் ஒரு படத்துல டி.வீ. சீரியல்களை நல்லா கிண்டல் பண்ணி இருப்பார். படத்துல (பெயர் ஞாபகம் வரல) அவர் வீட்டுக்குள்ள வரும்பொழுது, நிரோஷா, சீரியல்ல ஒருத்தி இறந்து போனதுக்கு அழுதுண்டு இருப்பாங்க. ஐயோ! இவ ரெண்டு மாசம் முன்னாடியே இறந்து போனதா காமிச்சாங்களே, இன்னுமா அதே சீனை காட்டறாங்கன்னு அவர் அதிர்ச்சியாய் கேக்கும்போது, நிரோஷா அழுதுண்டே, இல்லைங்க ஒவ்வொருத்தரா அவ இறந்து போனத நெனச்சு பாக்கறாங்கன்னு பாவங்க எல்லாரும்னு, சொல்லுவாங்க. இப்படி ஒவ்வொருத்தரும் நெனச்சு பாக்கும்போதெல்லாம் அதே காட்சியை மறுபடியும், மறுபடியும் காட்டி அந்த சீரியல நல்லா இழு இழுன்னு இழுத்திருக்காங்க. இதெல்லாம் கொடுமைன்னாலும், இந்த மாதிரி எல்லாம் கூட யோசிச்சு, சீரியல ஜவ்வு மாதிரி இழுத்துண்டு போறதுக்கும் ஒரு தனி சாமர்த்தியம் வேணும்தான்.
அன்புள்ள அநு
(ஒரு வழியாய் தமிழை தமிழில் எழுத கற்றுக்கொண்டேன் கீதுவால்.) உன்னுடைய அட்வைஸ் படி போகி அன்னிக்கு பழசை எல்லாம் தூக்கி போட்டாலும் பொங்கல் அன்றைக்கு புது சானல் திறப்பவர்கள் மறு ஒலிபரப்பு என்று இந்த பழையதுகளை ஒலிபரப்புவார்கள். ( புது சானல் ஆரம்பித்தால் பழஅயதைதன் போடணும் என்பது வழக்கு !) அன்புள்ள அம்மா
hai ! thamilil vandhuvitadhe !
"ஒரு வழியாய் தமிழை தமிழில் எழுத கற்றுக்கொண்டேன் கீதுவால்."
தங்கைக்காரி அக்காவுக்கா ? பேஷ் பேஷ்
நான் ரொம்ப நாள் முன்னாடி http://www.google.com/transliterate/indic/TAMIL அனுப்பிச்சி கொடுத்தேன்.
இந்த தம்பி சொன்ன கேட்பியா நீ !!
- சாய்ராம்
சாயிரம்
தம்பியே மன்னிக்கவும். தமிழை தமிழில் எப்படி எழுத வேண்டும் என்று நீஎனக்கு அனுப்பியது உண்மையே. அப்பபோ நான் ட்ரை பண்ணிய போது சரியாக வரவில்லை. அதனால் விட்டு விட்டேன். உனக்கும் என் நன்றி
லதா
சாயி"ரம்"
காலாங்க்காத்தாலே "ரம்" பேஷ் பேஷ் லதா !! ரொம்ப நன்னா இருக்கு
ராம் ராம்னு சொல்லாமே !!
நீ எதுக்கும் இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கிலிஷில் டைப் பண்ணு. உன் தமிழ் துரு பிடித்து இருக்கு
- சாய்ராம்
varum! aanaa varaadhu! stylla mudiyum! aanaa mudiyaathu! adhu pogattum aanaalum andha kandraaviya paaththaathaan thookkam varum! aanaa varaadhu! vaazhga mega serialgal! ozhiga namadu nimmadhith thookkam.
Post a Comment