Saturday, August 29, 2009

100th Post!!

Panneersoda has hit 100!


I thought of ordering a Black Forest Exotica to celebrate. But then, considering that these 100 posts are spread over 4 years, I have ordered humble pie!

What-do-you-call-it, the Whats-its-name??

Pronouns have to be banned.

It is ever since pronouns made their appearance that Man stopped taking his daily dose of spinach and broccoli. They became the ideal excuse for his laziness. When he realised that he could refer to the Codiaeum Variegatum as "it" and George Bernard Shaw as "him", he happily allowed partial atrophy of his brain .

And look where it has led him..

I'm sure the worst blunders in history were caused by pronoun-abusers.

In 1912, when on board the Titanic, the ship's attendant may have given the following message to his captain:

"We have found a what's-it-called over here. It's very near our this thing. So unless we take a what-do-you-call-it, we are all in a big what-ever-it-is. We need that thing- the thing that those chaps use- and we need it now. Otherwise, we are all, I mean to say, in big what's it. If you get what I mean.."...... SPLAAASH......." WE ARE SIN....KI...N....."

So, as I said, pronouns have to be banned. Until steps are taken shortly in this direction,they should atleast carry a warning label :"Repeated usage is injurious to health"!

Wednesday, August 26, 2009

ஏன் இப்டி?

டி. வீல பிள்ளையார் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் பாத்தேனே.பிள்ளையாரையே எதிலயும் காணோமே?

அது சரி, மைசூர் போண்டாலே என்ன மைசூரா இருக்கும். அப்டி தான்!

Saturday, August 22, 2009

Twitter, Shall I??

It's weeks since I joined the Facebook bandwagon. - And I'm yet to figure out what to do with it.

I have got an ID and a password. I've put in a couple of pics of self and family. Then I was
told you got to invite your friends . So, I sent out a request to my friends to become my friends,which is embarrassing, if not altogether insane.

Now that I have got a handful of friends in my counter, I find that all I can do is:

1. Write/Read useless posts ("It's raining here!")

2. Suffer senseless, annoying quizzes ("Find out what ghost sleeps in your bedroom") and pass on the agony to friends

3. Add a few more friends (when I have no use for the bunch that's already there!)

4. Send messages (I already use a mobile & Email for this purpose)

5. Keep adding more pics (right, but WHY????)

I remember in my previous organisation, the entire bunch of executives where Orkut-freaks. The silly asses used to post something in their co-worker's Orkut profile AND THEN yell across the desk, "Hei! I posted a scrap on your Orkut profile!!".

The fellow-Orkutter-moron would then log in and read out aloud the earth-shattering scrap:
"Hi! What's up??"

AND, this is where it gets really maddening, the louse would put out a reply in Orkut and yell across the table: "I've replied to it"!

Blogging is different. It is my hobby and PanneerSoda will find its rightful place in my resume, when I do update it. May be I'm missing something here, but, in re Facebook, the best course of action I can think of is to forget my ID and password.

Now, I find everyone joining Twitter. Now, after my Facebook trial, I'm waiting. I'm weighing this against that. If I find that all that I will get out of Twitter is another set of ID & password, I shall know what to do about it!

Tuesday, August 18, 2009

The Terrorist of Newark!

Any twerp trying to inveigle into the US will tell you this: when your name has more Khans or Shahs than the optimum level, the trick is to preserve a tactful silence and pray that the authorities will pardon the gaffe. Shah Rukh Khan, with whom both tact and silence are in scarce supply, must have gibbered his way to detention. In this fashion:

..

"Shah Rukh Khan, that's me, guys. SRK! That's who I am.Shah. Rukh. Khan. So, lets make the most of it" says Shah Rukh to the two uniformed Americans (Ted & Ed).

Ted takes out his pocket notebook, where he keeps a list of Words To Watch Out For.

Shah Rukh decides to drive home his point strongly, "Shah Rukh! The Badshah of Bolywood! The Sheikh of Mumbai! DON'T YOU KNOW?? Saif Ali, Aamir Khan, Salman Khan, Abishek, Alla Rakha Rehman, Farah Khan??", adding his collegues' name for good measure.

Ted stares down at his list. Never had he met a suspect who reeled out almost all the words in the roster. Ted licks his pencil and ticks out the words. He also adds, against the word "Khan", the number 3 in brackets, for he always likes to get his facts right.

Only two words remained unticked : Osama and Jihad!

Ed, peeping at Ted's book, decides to start enquiry: "So, you are Shah Rukh Khan?"

"Ji Haan" (Yes,Sir!) , says the Badshah.

"Ed!" ,Ted screams at Ed!
"Ted!", Ed screams at Ted!

"Hello Ed!, Hello Ted!" , SRK completes the formalities and becomes chatty.

"Ofcourse, nowadays I'm also the CEO of Kokotta Knight Riders, as you know,"says SRK.

("Whaddiddesay?"hisses Ted,staring fixedly at the single unticked word remaining in his list.
"Kokqueda something - It's his terrorist outfit."hisses ED.)

SRK realises his mistake. When you own a cricket team that has just got the drubbing of a lifetime, you don't advertise it. Striving to smooth over his faux pas, he carries on: "Ofcourse, we blew up the IPL in South Africa, you know. But we have better plans this year..."

("He blew up the Eye-Peal!" hisses Ted.
"What's the Eye-Peal?" mutters Ed.
"Prob'ly sumfing like Twin Towers!" rehisses Ted.
"He says he has planned somfing this year too?")

"Do you travel abroad often?" asks Ed.
"The last time I travelled abroad was for the shooting of Billu Barber." says SRK.

(Ted writes down in his notebook: "Shooting of Blue Barber". No, that didn't make sense? He strikes out "Barber" and substitutes it with "Harbour")

"So,why are you in the US?" asks Ted, simply wishing that he was'nt.

"Shooting" answers SRK. "Nice meeting you! Bye!" says SRK trying to walk towards the door.
Ted blocks the door and pushes SRK back.

SRK sighs. Happens everywhere! People just can't seem to get enough of him! Now he will have to enthrall his audience again! (He had already classified his uniformed chums as "audience")

He decides to do a dance number from Billu Barber. Accordingly, he throws his arms wide, bends his knees at an angle and performs his song-n-dance.

("Why is he walking like a penguin with corn in its feet?" asks Ted.
"Raving lunatic!"Ed passes judgment, giving SRK a reproachful eye.
"This is the price you pay, you Sinner!" , said the Eye, "for blowing up Eye-Peals and shooting blue barbers...or harbours")

SRK,now fully engrossed in his work, had come to the end of the song. As required, he sits down on his knees, and makes circular motions with his head, much like a merry-go-round.

("Ed! This is real bad! Dinchoo see the movie? The guy says his prayers sitting on the floor. Then, he looks left, then right and wipes his face, and then..BANG!!"says Ted.

"No?How much time do we have?"

"Two mins. May be more, I fast-forwarded this bit", whispers Ted.

Digesting the fact that he had about two minutes to save America, Ed pushes the red button beneath his desk.)

SWAT team is notified and soon cordons off the Security area at the airport.

"BANG! VRRRRR....UM"

Shah Rukh Khan's performance gets disrupted by the noise (which is the noise a SWAT team member makes when trying to get inside noiselessly).

SRK looks to the left, trying to ascertain the source of the noise.
He looks right, at his audience, requesting further explanation.

At that precise moment a hand shoots out at the scruff of his neck and twists his hands.
"If you try to WIPE YOUR FACE, YOU SON OF A ***#@##, I WILL KILL YOU" screams Ed.

As dozens of SWAT members pour into the room, it finally dawns on SRK that something is not right.

Ed puts his hands inside SRK's pockets. Ted breaks into applause as Ed takes out a hanky, with a quiet dignity that behooved a person who single-handedly saved the United States Of America!

Monday, August 17, 2009

கேள்வி பதில்!

இந்த வாரம் விகடனில் படித்தது:

நமீதாவிடம் கேட்கப்பட்ட கேள்வி:
"காவிரிப் பிரச்சினை எப்போ தீரும்?"

நமீதா பதில்?
"காவிரிக்கு என்னா பிரச்சனே? love failureஆ?

Saturday, August 15, 2009

ஆஸ்கார் வாங்கும் பிள்ளையார்!


நாளைய செய்திகள்!

வணக்கம்! பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகமெங்கும் ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கின்றன. காவல் துறை ஆயத்த நிலையில் இருப்பதாக முதல்வர் தெரிவித்தார். சந்தேகத்துக்கு இடமளித்த 1000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 300 போலீசார் தமிழகத்தில் குவிக்கப் பட்டுள்ளனர். பத்தாததற்கு ராணுவமும், C.B.C.I.D ஐச் சேர்ந்த 200 போலீசாரும், 200 துப்பறியும் நாய்களும் சென்னையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று பிள்ளையார் சதுர்த்தி ஏற்பாடுகளைக் குறித்துப் பேசிய முதல்வர், பிள்ளையார் பிறந்த தினத்தை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தேங்காய் உடைப்பது, சூடம் ஏற்றுவது போன்ற அராஜகச் செயல்கள் மூலம் சிறுபான்மைச் சமூகத்தின் மனம் புண்படும்படி நடந்திட்டிடக் கூடாது என்றார். மேலும், "பிள்ளையார் என்று ஒருவர் உண்மையில் இன்று பிறந்தாரா? எந்த பிரசவ ஆஸ்பத்திரியில் பிறந்தார்?" என்றும் கேள்வி எழுப்பினார்.

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த செல்வி ஜெயலலிதா, இந்த நன்னாளில் கேடு கெட்ட கலைஞர் ஆட்சி முடிந்திட வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கும் படி தொண்டர்களுக்கு ஆணையிட்டார்.
தன் ஆட்சிக் காலத்தில் பிள்ளையார் பால் குடித்ததை நினைவு கூர்ந்த அவர், "கருணாநிதி ஆட்சியில் பிள்ளையார் பால் குடிக்க மறுப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். "இது குறித்து ஆராய விசாரணைக் கமிஷன் வைக்க இந்த அரசு தயாரா?" என்றும் சவால் விடுத்தார்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்துச் செய்தியில், "தமிழகத்தில் 12,54,674 பிள்ளையார் கோவில்கள் உள்ளன. அதில் கொழுக்கட்டை விநியோகிக்கும் கோவில்கள் 23,567 . மற்ற கோவில்களில் ஏன் கொழுக்கட்டை தரப் படவில்லை? மக்களை ஏமாற்ற முடியாது. எனக்கு கொழுக்கட்டை பிடிக்கவும் தெரியும். கொழுப்பு பிடிச்சவங்களை அடிக்கவும் தெரியும். ஆ..ந்ன்!" என்று கூறினார்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தனது வாழ்த்துச் செய்தியில் பிள்ளையாரை நம்புவது பகுத்தறிவற்ற செயல் என்று குறிப்பிட்டார். மேலும், பிள்ளையாரை "பிள்ளையான்" என்று அழைப்பது தான் பகுத்தறிவு என்று விளக்கம் அளித்தார்.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி,தமிழ்நாட்டில் தேங்காய்கள் எதோ ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம் மூலம் தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகக் கூறினார்.

இந்தக் காமெடியை தான் ஏற்கனவே ஒரு படத்தில் செய்து விட்டதாகவும், சுப்பிரமணிய சாமி காப்பி அடிக்கிறார் என்றும் கவுண்டமணி காரசாரமாக பேட்டி அளித்துள்ளார்.

பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இடுப்பில் ஈரத் துணியுடன் தலையில் பிள்ளையாரைச் சுமந்த படி டான்ஸ் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தொண்டர்கள் நாள் முழுதும் தோப்புக் கரணம் போடும் சிறப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.

சென்ற ஆண்டு கிரிக்கெட் ஆடும் பிள்ளையார், கம்ப்யூட்டர் பார்க்கும் பிள்ளையார் போன்ற பொம்மைகள் செய்யப்பட்டன. இந்த ஆண்டும், காலத்துக்கு ஏற்ப, ஆஸ்கர் வாங்கும் பிள்ளையார், விடுதலைப் புலி பிள்ளையார், பவர் ரேஞ்சர் பிள்ளையார், டாட்டூ அணிந்த "யூத்து" பிள்ளையார் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

வணக்கம்!

.............

பிள்ளையார் தனக்குத் தானே பாடிக் கொண்டார்: "ஏன் பிறந்தாய் மகனே...ஏன் பிறந்தாயோ?"

Thursday, August 13, 2009

செய்தியும் சந்தேகமும்!

(சந்தேகத்தைத் தீர்ப்பவர்க்கு ஆயிரம் பொன் பரிசு. ஆனா கட்டாயம் "மயிலியற், கியிளியர்"ன்னு பாட்டெல்லாம் பாடக்கூடாது!)


செய்தி:
பன்றிக் காய்ச்சல் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை.

சந்தேகம்:
  • ஸ்கூலுக்கு ஒரு வாரம் லீவு விட்டா பன்றிக் காய்ச்சலை ஒழிச்சுக் கட்டிடலாம் என்று கண்டுபிடித்த அந்த அதி மேதாவி யாரோ?
  • இந்த வாரம் மட்டும் தான் "பன்றிக் காய்ச்சல்" வாரமா?அடுத்த வாரம் காய்ச்சல் வந்தா என்ன செய்றது? (பேசாம பள்ளிக்கூடத்தையே இழுத்து மூட வேண்டியது தானே?)
  • இப்படியும் இருக்கலாம். ஒரு வேளை தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் பன்றிக் காய்ச்சலை தனக்கே உரிய முறையில் ஒழித்து விடலாம். எப்படி? பன்றிக் காய்ச்சலுக்கு வேற பெயர் வெச்சுட்டா ஆச்சு! சிக்குன் குன்யா வந்த போது நோயாளிகளிடம் "ஒண்ணும் இல்ல, சாதாரண ஜுரம்" என்று சொல்லி, தமிழகத்தில் சிக்குன்குன்யாவை ஒழிக்கவில்லையா?
(அடுத்த வாரம்: தமிழ் நாட்டில் பன்றிக் காய்ச்சலை ஒழித்த தமிழக அரசுக்கு "மிழ்த் திரையுலகமே திரண்டு" வந்து விழா எடுக்கும்!)


செய்தி:

நரேஷ் குப்தா தலைமையில் எலெக்ஷன் கமிஷன் வரப்போகும் பை - எலெக்ஷனைப் பற்றி இரண்டு மணி நேரம் விவாதித்ததாம்! (சன் நியூஸ்)
கடைசியில் அவர்கள் எடுத்த முக்கியமான முடிவு: இந்த முறை மையை வலது கையில் வைக்க வேண்டும் என்பது.
ஏன்? சமீபத்தில் நடந்த எலெக்ஷனில் மை இடது கையில் வைக்கப்பட்டது. அது இன்னும் அழிந்திருக்காதே? அப்புறம் மொத்த தேர்தல் ஏற்பாடும் பாழாப் போயிடுமே?

சந்தேகம்:
  • EVM, computerised voter list, voter ID card இதெல்லாம் எதுக்கு? மை இல்லாட்டா தேர்தல் நடக்காது போல இருக்கே?
  • ஆட்சி இப்போது கவிழ்ந்து விட்டால் நரேஷ் குப்தா பாடு ரொம்பக் கஷ்டம். தமிழக மக்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு கை எக்ஸ்ட்ராவாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வாரோ என்னவோ ?
செய்தி:

தமிழகத்தில் கன்னடக் கவிஞர் சர்வஞரின் சிலை திறப்பு. இரண்டு மாநில அமைதிக்கு இது சுமுகத் தீர்வு என்றார் மு..

சந்தேகம்:
அது என்ன சுமுகத் தீர்வு? அங்கே வள்ளுவர் சிலையை நீ உடை. இங்க உங்க ஆள் சிலையை நான் உடைக்கறேன் என்பதா?

Sunday, August 9, 2009

ஈவது டேஞ்சர்! ஏற்பது அதனினும் டேஞ்சர்!

பாரி வள்ளலா இல்லாட்டாலும் அதிலே பாதி வள்ளலாவாவது இருக்கணும்னு ஆசைதான்! ஆனா பாருங்க, அது அவ்வளவு ஈசியா இல்லையே!

முல்லைக்கு தேர் குடுக்கறது எல்லாம் ஒரு மேட்டரா? எந்த முல்லையாவது தேரைக் கொண்டு போய் மெக்கானிக் ஷேட்டிலே போட்டு, ஸ்பேர் பார்ட்டை வித்து, டாஸ்மாக் போய் புல்லா ஏத்திக்கிட்டு , நடந்து போய்ட்டிருக்குற பாரிகிட்டயே போய் ,"ஏண்டா பேமானி! ஹாரன் அடிக்கறதில?" என்று கலாட்டா பண்ணுமா?

நமக்கு இப்போல்லாம் யாராவது உதவின்னு வந்தாலே சந்தேகம்தான் முதல்லே வர்றது. கோயில் கும்பாபிஷேகம்னு டொனேஷன் கேட்டா, "அப்படி ஒரு கோவிலே இருக்காது, வேணும்னா பார்!" என்று சவால் விடுகிறோம்.

"சாப்டு நாலு நாள் ஆச்சு சாமி. தர்மம் பண்ணுங்க"

"நாலு நாளா? வயறு ஒட்டினாப்பலே இல்லையே? தலை சுத்தறா மாதிரி இல்லையே? நல்லா ஸ்டெடியா நிக்கறானே? கண் எல்லாம் நல்லாதான இருக்கு"
நம் மருத்துவ பரிசோதனை முடிவதற்குள் அவன் "சாப்டு அஞ்சு நாள் " ஆகி இருக்கும்.

நூற்றில் பத்து பேர் ஏமாற்றுவதன் பலன், மிச்ச தொண்ணூறு பேரைப் பார்த்தாலும் நமக்கு "இவனும் பிராடோ?"ன்னு தோன்றுவது தான்.

அதே போல், யாராவது கேட்காமல் ஏதாவது உபகாரம் செய்தாலும் அவர்களுக்கும் அதே கதி தான். "இவன் ஏன் எனக்கு உதவணும்? இதிலே ஏதோ உள்கூத்து இருக்கு" என்று தான் முதலில் நினைக்கிறோம். கற்றதனால் ஆய பயன்!

டிரைனில் ஒரு முறை யாம் பெற்ற பழம் பெருக இவ்வையகம் என்று நினைத்து பக்கத்து சீட்க்காரர்களுக்கும் பழம் கொடுத்தேன்.

முதலாமவர் ரொம்பப் படித்தவர் போலும். "அய்யய்யோ! எனக்கு பழம் அலர்ஜி"என்று தொடாமல் ஒதுங்கி விட்டார். இரண்டாமவர் கை நீட்டி பழத்தை வாங்கி இருப்பார். அதற்குள் நம்ம "பட்சவர்" அவர் காது கிட்ட போய், "யோவ்! அறிவிருக்கா? இதுல மயக்க மருந்து ஏத்தி இருப்பாங்க!"என்று உபதேசம் செய்தார்.

"ஹீ!ஹீ! எனக்கு சுகர்! மறந்தே போச்சு!" என்று அசடு வழிந்து, பழத்தை ஜாக்கிரதையாக கீழே வைத்தார்.

வேணும் எனக்கு! இதுக்கு பதில் ஒரு முல்லைக்கு இந்தப் பழத்தை போட்டு, கடை ஏழு வள்ளல்களில் சேர்ந்திருப்பேன்! என் பேரும் தமிழ் பாடத்தில் வந்திருக்கும்!

Thursday, August 6, 2009

இவ்விடம் ஏட்டுச்சுரைக்காய் ஏற்றுமதி செய்யப்படும் !!

ஐந்தாம் வகுப்பில் மங்களம் டீச்சர் ஒரு நாள் மகாலக்ஷ்மி மீது "மர மண்டை" என்று திட்டி டஸ்டரை தூக்கி எறிந்தார். இந்த மகாலக்ஷ்மி கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தில் இருந்தே ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மூத்த குடி! எத்தனை டஸ்டர் பார்த்திருப்பாள்! முன் வைத்த மண்டையை பின் வைக்க மாட்டேன் என்று நிற்க, பாய்ந்து வந்த டஸ்டர் மண்டையில் மோதி இரண்டாகி விழுந்தது!

என்ன அதிசயம்! மகாலக்ஷ்மி உண்மையில் "மர" மண்டை! இந்த ஆச்சச்சர்யத்தை உடனே பக்கத்து பெஞ்ச் பெண்ணுடன் பகிர்ந்து கொள்ளத் திரும்பினேன்! "நச்"- என் தலை மேல் ஒரு சாக்பீஸ் விழுந்தது! டஸ்டர் உடைந்த கோவத்தை மங்களம் மிஸ் என் மீது காட்டினார். அப்புறம் மங்களம் மிஸ் தன் கைக்காசைப் போட்டு டஸ்டர் வாங்கியதும், அதன் பின் எவ்வளவு கோவம் வந்தாலும் எட்டணா சாக்பீசைத் தவிர வேறு எதையுமே தூக்கி எறியாததும் தனி கதை!

இப்போ எதுக்கு இதெல்லாம்? ஒண்ணும் இல்ல, அந்த சாக் என் மேல விழுந்த பொது நினைச்சேன், நாமும் டீச்சராகி , நாலு பேர் மேல இப்படி சாக் அடிக்கணும் என்று! அதுக்கப்புறம் என்னென்னவோ பண்ணி, கொஞ்ச நாள் ஒண்ணும் பண்ணாமலும் இருந்து, இப்போ திருப்பி டீச்சர் ஆகலாமான்னு யோசனை!

ஆன்லைன் teaching க்கு எவ்வளவு மவுசு இருக்கு என்று மௌஸைத் தட்டி பார்த்தேன்! சுமார் ஒரு டஜன் வெப்சைட்டுகளை அலசி, ஆராய்ந்து, பிரித்து மேய்ந்ததில் ஒன்று புரிந்தது: காலம் ரொம்...ப மாறிப் போச்சு!
பின்னே?

1 என் காலத்தில் டீச்சர் தான் ஹோம்வொர்க் கொடுப்பார். அதை ஏன் செய்யவில்லை என்று சொல்வது மட்டுமே மாணவமணிகளின் கடமை. இப்போ ஆன்லைனில் மாணவர்கள் டீச்சருக்கு ஹோம்வொர்க் கொடுத்து ரெண்டு நாளில் சப்மிட் பண்ணும்படி உத்தரவு போடுகிறார்கள்! ஏன் ஹோம்வொர்க் செய்யலை என்று ஸ்டூடண்ட் கேட்க, டீச்சர் தான் பாவம் "வேலைக்காரி வரலை, பையனுக்கு சளி" என்று என்னென்னோவோ காரணம் சொல்ல வேண்டி இருக்கு.

2 அப்போ எல்லாம் பசங்க லேட்டா வந்தா, கிளாசுக்கு வெளியே நிக்க வெச்சுடுவாங்க. ஆனா டீச்சர் எல்லாக் கதையும் பேசி முடிச்சு பதினைந்து நிமிஷம் லேட்டாத்தான் வருவாங்க! இங்கே என்னடான்னா, "chat room ற்கு இந்த டீச்சர் டயத்துக்கு வரலை! என் படிப்பு பாழாப் போயிடுத்து" என்று பையன் குறை சொல்கிறான். அது மட்டுமா, "இந்த டீச்சர் எப்பவுமே லேட்! நீங்க யாருமே இவங்க கிட்ட படிக்காதீங்க" என்று குரூப்பாக டீச்சருக்கு ஆப்பு வைக்கிறாங்களே!

3 "இந்த மக்கு பையனுக்கு எவ்வளவு சொல்லிக் குடுத்தும் புரிஞ்சுக்க மாட்டேன்றான்" என்று அப்போல்லாம் டீச்சர் புலம்புவார். இங்கே, "இந்த மக்கு வாத்தியார் எவ்வளவு சொல்லிக் குடுத்தாலும் புரியலை" அப்பிடீன்னு பையன் சொல்றான்!

4 வாத்தியார் "குட்" போட்டார் என்று பசங்க பீற்றித் திரிந்த காலம் போச்சு. அந்தப் பையன் "குட்" என்று ரிவியூ சொல்லிட்டான் என்று ஆன்லைன் வாத்திகள் பீற்றித் திரிகிறார்கள்

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆறானோ இல்லையோ, இன்கம் டாக்ஸில் இருந்து எஸ்கேப் ஆகிறான்! அதனால் ஆன்லைன் கிளாஸ் நடத்துவதை சைட்பிசினசாக பலர் செய்து வருகின்றனர். ஒரு இங்கிலீஷ் டீச்சர் "punctuation marks மட்டும் போட்டுத் தருவேன், பத்து வார்த்தைக்கு ஒரு டாலர் " என்று கடை விரிக்கிறார். ஒரு கணக்கு புரொபெசர் "எக்ஸாம் நாளில் ஓவர்டைம்" என்று ஆடித் தள்ளுபடி போர்டை மாட்டுகிறார்!

Teaching profession இல் இருந்த nobility போய், அதுவும் கூலிக்கு மாரடிக்கும் விஷயமாக ஆனதில் கொஞ்சம் வருத்தம்! இந்த வருத்தத்திலும் ஒரு அல்ப சந்தோசம் : ஆன்லைன் டீச்சிங் என்பதால் எந்த மாணவ மணியும் என் மண்டையை டஸ்தரால் உடைக்க முடியாது!

Monday, August 3, 2009