Tuesday, September 29, 2009

ஆர்வக் கோளாறு!

என் தோழி பிருந்தாவின் பையனுக்கு நாலு வயசு. எல்.கே.ஜி படிக்கும் கிருஷ்ணன் காலையில் பாட்டுக் கிளாஸ், சாயங்காலம் மிருதங்கம் என ரொம்ப பிசி.

நாலு வயசுக்கு இதெல்லாம் ஓவரா இல்லை? "பையனுக்கு பாட்டுன்னா ரொம்ப ஆர்வம். அதான்" என்கிறாள் பிருந்தா.

எனக்கு சின்ன வயசில் எங்கள் வீட்டு மடியில் குடியிருந்த ஸ்ரீகாந்த் நினைவு வந்தது. இந்தப் பயலுக்கு அப்போ பத்து வயசு இருக்கும். கொஞ்சம் பாரியான உடம்பு. மத்த பசங்களோட ஓடியாடுவது எல்லாம் கஷ்டம். இருந்தாலும் ஸ்ரீகாந்தின் அம்மாவுக்கு தன் பையன் டான்ஸ், பாட்டு என்று எல்லாத்திலேயும் சாதிக்க வேண்டும் என்று ஒரே ஆசை.

பையன் என்னைக்கோ தெரியாம ப்ரூஸ்லீ படம் பார்க்க, "என் மகனுக்கு கராத்தேன்னா ஒரே ஆர்வம்" என்று சொல்லி, உடனே பக்கத்து காம்பௌண்டில் இருந்த கராத்தே கிளாசில் சேர்த்து விட்டார்.

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு பையனை கட்டிலில் இருந்து இழுத்து, கராத்தே ட்ரெஸ்ஸைத் திணித்து, "குளிக்காட்டாப் பரவா இல்லை" என்று முகத்தை அலம்பி, வண்டி பவுடரை அதில் அப்பி, "டாட்டா" காட்டி அனுப்பி விட்டார்.

நான் சி.எ கிளாசுக்கு கிளம்பும்போது தான் ஸ்ரீகாந்தும் அரை தூக்கத்தில், மாவில் விழுந்து எழுந்த உருளைக் கிழங்கு மாதிரி கராத்தே கிளாசுக்கு போவான்.

நானும் ஒரு நாள், பயல் என்னதான் சண்டை போடறான் பாப்போமே, என்று பக்கத்து காம்பௌண்டில் எட்டிப் பார்த்தேன்.எல்லாப் பசங்களும் "ஆய்!ஊய்!" என்று காற்றைக் கிழிக்க, நம்ம ஆள், லேசாக இரண்டு கைகளையும் பாக்யராஜ் டான்ஸ் ஆடுவது போல் அசைத்துக் கொண்டிருந்தான்.

நான் கிளாஸ் முடிந்து பத்து மணிக்கு வீடு திரும்பும் போது, ஸ்ரீகாந்த் "சபையோரை மகிழ்விக்கும் நேரம்". பயல் கராத்தே திறத்தை காட்ட, அவன் அம்மா அவன் பிரதாபங்களை அள்ளி விட்டுக் கொண்டிருப்பார்: "சீக்கிரம் டோர்னமென்ட் ஆடப் போறான்..மெடல் வாங்குவான்! "

அந்த அதிசயமும் நடந்தது. ஸ்ரீகாந்த் சண்டை போட்டு வாங்கிய மெடலை ஆச்சர்யமாகப் பார்த்தோம். ஒரு வேளை வடிவேலு மாதிரி "அடி வாங்கினது நானு!" என்று லந்து பண்ணி வாங்கி இருப்பானோ??

ஆனால் என்ன காரணமோ, சீக்கிரமே இந்த கராத்தே கூத்து முடிவு பெற்றது.
"அவனுக்கு டான்ஸ்ல தான் ஆர்வம்.." என்று அடுத்த கூத்து ஆரம்பம்..

குழந்தைக்கு உண்மையில் எதில் திறமை இருக்கு என்று புரிந்து கொள்ளாமல், ஆய கலைகள் அறுபத்து நாலையும் அட்டவணை போட்டு குழந்தை மேல் திணிப்பது ஒரு வித ஆர்வக் கோளாறு என்றால் இதிலே இன்னொரு வகையும் இருக்கு:

இந்தப் பயல் தெரு கிரிக்கெட்டில் ஸ்டார். உடனே இவனோட அப்பா, பையனை கிரிக்கெட் கோச்சிங்கில் சேர்த்து விட்டார். கிரிக்கெட் கிட்டும் வாங்கிக் கொடுத்தார், - ரொம்ப நல்லது.
தினமும் பயலை க்ளாசுக்கு கூட்டிப் போவார் - ரொம்ப ரொம்ப நல்ல விஷயம்.

அதோடு நிற்காது, "உனக்கு ஸ்பின் வரலை, நீ பாச்ட் பௌலிங் கத்துக்கோ, உனக்கு பீல்டிங் ப்ராக்டிஸ் வேணும், உன் கவர் டிரைவ் சரியாவே இல்லை, அந்தப் பயனைப் பார்.." என்று அட்வைஸ் மழை பொழிந்து, ஒரே வாரத்தில் மகன் "நான் கோச்சிங் போகலை" என்று சொல்லி விட்டான்.

பிருந்தா வீட்டில் இந்த ரெண்டு தவறுகளும் நடந்திருக்காது என்று நம்புகிறேன். My best to Krishnan.

Monday, September 28, 2009

கந்த சாமி..

எனக்கு ரொம்ப வயசாகி விட்டதோ? கந்தசாமி படம் பார்த்த போது இப்படித்தான் தோன்றியது.
பின்னே? கமர்ஷியலாக ஹிட்டான ஒரு படத்தை சுமார் ஒன்றரை மணி நேரம் பார்த்த அப்புறம் ஒண்ணுமே புரியலைன்னா என்ன அர்த்தம்?

என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் படத்தில் விக்ரம் முகத்தில் ஏதேதோ கலர் அடித்து, ரகுவரன் மாதிரி ஒரு போர்வையையும் போர்த்திக் கொண்டு , என்னமோ வேஷத்தில் (சேவல் கெட்டப்பாம்!சேவல்கள் எல்லாம் விக்ரம் மேல் மான நஷ்ட வழக்கு போடப் போவதாகக் கேள்வி) வந்து வழக்கமான சண்டையைப் போடுகிறார்.

ஸ்ரேயா ஒன்று டிரெஸ்ஸைப் போட்டு, அப்புறம் அதைக் கிழிக்கிறார். இல்லன்னா கிழிச்சிட்டு அப்புறம் போட்டுக்கறார். "போட்டுகின்னு கியிசிக்கலாம்...கியிச்சிகின்னு போட்டுக்கலாம்.." என்று பிரபுதேவா பாட்டு மாதிரி. ஒரு வேளை படத்தோட பேரைத் தப்பா புரிஞ்சிட்டாரோ ?

சிரேயாவின் ஆட்டமே தேவலாம் என்கிற மாதிரி காமெரா அப்படிஒரு ஆட்டம் ஆடுது. ஒரு நிமிசத்துக்கு மேல் யாரும் தலையைப் பிடிச்சிக்காம படத்தைப் பார்க்க முடியாது.

பாவம் காமெராமேன் யாரோ? கூட இருந்தவங்களாவது ஓடிப்போய் அவர்கிட்ட ஒரு சாவிக்கொத்தைக் கையிலே கொடுத்திருக்கலாம் இல்லையா?
இப்போ யார் அவஸ்தைப் படறது?

Friday, September 25, 2009

காணவில்லை!

முதலில் நாரைக் காணோம்.
அப்புறம் நாரோடு சேர்ந்து பூவும் காணோம்.

முன்னொரு காலத்தில் பூ கட்டுபவர்கள் "நார்" என்று ஒன்றை உபயோகித்து வந்தார்கள். சில வருடங்களுக்கு முன், அந்த நார் ஒரு நாள் காணாமல் போய், பிளாஸ்டிக் ஒயரும் நூலும் வந்தன. இப்போது, பூவே பிளாஸ்டிக் பூ ஆகிவிட்டது.

இந்த முறை நவராத்திரிக்காக பூவைத் தேடி அலைந்தது தான் மிச்சம். நிஜ மல்லிகையும் மருவும் ரோஜாவும் மாயமாய் மறைந்து விட, எங்கும் பிளாஸ்டிக், எதிலும் பிளாஸ்டிக்.

எதிர் வீட்டில் கொலுவிற்கு அழைத்திருந்தார்கள்.

பிளாஸ்டிக் பூ மாலை அணிந்தபடி அம்மன் சிரிக்க, கீழே பிளாஸ்டிக் ஆப்பிள், பிளாஸ்டிக் மாம்பழம், இன்ன பிற.

தாம்பூலத்தில் பிளாஸ்டிக் வெற்றிலை "சும்மாநாச்சுக்கும்" வைக்கப்பட்டிருந்தது.
அதை கண்ணால் பார்த்து விட்டு, தட்டில் உள்ள பிற பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டுக்கு வந்ததும், சுண்டல் பாக்கெட்டைப் பிரித்தேன்.

மூக்கு அருகே வைத்து முகர்ந்து பார்த்தேன் - எண்ணெய் வாசனை.
விரல் இடுக்கில் வைத்து நசுக்கிப் பார்த்தேன் - நசுங்கியது.
கொஞ்சூண்டு நகத்தால் கீறிப் பார்த்தேன் - பெய்ன்ட் வர வில்லை.

இருந்தாலும் இன்னும் சந்தேகமாவே இருக்கு - இந்த சுண்டலை சாப்பிடவா, இல்லை ஷோ-கேசில் வைக்கவா?

Tuesday, September 22, 2009

A Time to Kill.....

When I moved into Hyderabad in 2005, I decided to follow my mother's example. So, I got up at 6 sharp, only to discover that the milk man comes in at 6.30, the water is pumped at 7, the sweeper comes at half past eight and shops open only at 10.

Unlike Chennai, which is abuzz at 6 in the morning, the land of the Nawabs creaks its bones at 7 A.M in summer, and much later in winter. No dawn walkers here. Anyone who walks at an unholy hour like 6 is assumed to be sleep-walking or suffering from insomnia, or worse - a chain snatcher.

I soon learnt that when your carpenter or electrician tells you, "Podhdhuna Ochesaamu" (Will come early in the morning"), he is making a tentative schedule to drop in at around 10 - 11 A.M any time that week - or that fortnight!

Similarly, we found that any invitation we receive for any function, is silent as regards time.

"At what time is the function?"

"7, 7.30.."

"7 or 7.30?"

"That's right!"

"???"

There is also another way of answering this trick question:

"At what time is the function?"
"7-ish"

- You will notice that this answer gives you a buffer of nearly an hour!


The worst part is, this attitude seems to have rubbed itself off on the bird-life here as well.
There is a dove family that is residing beneath the A.C in our bedroom window.
The parents tuck the little ones in to bed at 9 p.m, after which, you will not hear a twig snap beneath their claws.

The family sleeps fitfully throughout the night, right through the morning prayers from the mosque at 5.00 A.M (a recorded voice),the milkman's ring at 6.30 and the sweeper's ring at half-past eight. By the time the mama- dove pulls off the straws and peeps through the A.C and declares that its such a fine morning,it is close to 9 A.M.

If that's the early bird, then the less that is said of the worm the better!

Thursday, September 17, 2009

விவசாயி...நான் விவசாயி..

தினமும் மாட்டைக் கறந்து, நிலத்தை உழுது, விதைத்து,அறுவடை செய்து.. .

இதெல்லாம் எப்போதில் இருந்து ? facebook இல் Farmville விளையாட ஆரம்பித்ததில் இருந்து.. I'm fast becoming an addict. இதிலே இருவது பயிர் அறுவடை செஞ்சா மெடல் வேற தர்றாங்களாம்! மூணு மிருகங்கள் வளர்த்தா அவார்ட்.நாலு சக விவசாயிகள் செட்டு சேர்ந்தா அதுக்கு தனி அவார்ட்..பக்கத்து நிலத்திலே புல் புடிங்கினா பிரைஸ்!
காக்கா ஓட்டினா பிரைஸ், மூணு பிரைஸ் கிடைச்சா, அதுக்கு தனி பிரைஸ்...

ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா, ஆனா நான் இணையத்தில் "ugly duckling" வளர்க்கறேன்.

Friday, September 4, 2009

Exams!

The CBSE has made class 10 board exams optional from this year. Instead, there will be a grading system and students will be evaluated throughout the year.

Good decision, though belated, I should say.

As one whose formative years as a student always revolved around board exams, term exams, revision exams and other sundry exams, I know enough to tell you that the students who score well in these "board exams" are not really geniuses, not by a mile. And the ones licking their
wounds in the sidelines aren't duds either.

Last year, 2 pupils - the Dunce and the Whiz-Kid took their board exams.

The Maths question paper, on sighting which the whizkid revived like a watered flower, had quite the opposite effect on Dunce.

"Prove", demanded the question paper, "that in any right triangle, square of the hypotenuse is equal to the sum of squares the other 2 sides."

The Whiz, rightly recognizing this as Pythogoras Theorem, reeled off the proof, and went on to the next question.

The Dunce had a great respect for mathematicians in general and Pythogoras in particular. He thought it wouldn't be seemly to question Pythogoras' opinion in the matter of the hypotenuse. Dash it, a man of impeccable character, if that's the way he felt about the hypotenuse, he had to be right. So, he had never bothered to figure out the proof.

Sighing, he sets out to answer the question , in his usual, inimitable style:

"Given:" , writes the Dunce and copies down what is given in the question.
"To Prove:", he writes, and again dutifully copies the question.
"Proof:'', he writes and leaves a blank.
Then, leaving considerable space below the word, "Proof", he triumphantly writes "Hence Proved."

Pausing merely to think over whether the space provided would be sufficient for the examiner to fill in the "Proof" at some convenient later date, he takes out his pencil and double-underlines his words of wisdom.

Looking pleased at his "presentation", he happily sets out to answer other questions, in much the same fashion.

The question on algebra: "x2 + 2x − 3 =5" has him flummoxed for a second. Then, recovering, he
proceeds to answer the "steps":
"x2 + 2x = 5+3"
"x2 + 2x = 8"
"x2 = 8- (+ 2x)"
"x2 = 8 - 2x"

- He carries on this way for some time, then unable to unmask x, he leaves the mystery at that, he goes on to solve other cases.

When their papers are marked, the Dunce gets 3 out of 5 for Pythogoras Theorem, (1 mark each for "Given", "To Prove" and "Hence Proved") and the Whiz gets only 2 ( for missing out on these).
The Whiz gets a zero for question on algebra, for simply writing"2", while the Dunce gets 3 out of 4 for the "steps".

The Dunce also gets 2 marks, ex-gratia, for neat presentation.

At the end of the day, the Dunce and Whiz both join the elite group of "Above Average" students.

PS: The Dunce will go on to get his engineering degree in some private college. The Whiz is all set to flee the country.


Thursday, September 3, 2009

ஜாக்கிரதை!!

இன்று இரவு எட்டு மணிக்கு சென்னையில் இருந்து போன்.

அம்மா:
"அனு! அங்கே யாரையோ ஹெலிகாப்டர் ஏத்தி கொன்னுட்டாளாமே? எங்களுக்கெல்லாம் நாளைக்கு லீவு!"

"என்னா??"

"நீ அந்த ஊர்ல தானே இருக்கே? தெரியாதா? சரி! ஜாக்கிரதை! பிளாகெல்லாம் எழுதாதே!"

மழை நாள் என்பதால் போனில் வழக்கத்துக்கு அதிகமான பின்னணி இசை.
அதையும் தாண்டி, நான் பேசியது அம்மாவுக்கு புரிந்ததோ இல்லையோ? எதற்கும் தெளிவு படுத்துவோம் :


"Killed in copter crash" என்றால் ஹெலிகாப்டர் ஏத்தி கொன்னுட்டா ன்னு அர்த்தம் இல்லை.

இறந்தது யாரோ இல்லை - ஆந்திர முதல்வர்.
(இல்லை- என்.டி ராமாராவ் இல்லை!)

ஹெலிகாப்டர் என்பது பறக்கும் வஸ்து. நடப்பன, ஊர்வன - இந்த ஜந்துக்களை எல்லாம் ஹெலிகாப்டர் ஏத்தி கொல்வது இல்லை.

பிளாக்? வலை உலகில் 0.00125% பேர் (உபயம்:websiteoutlook.com) மட்டுமே பார்க்கும் என் சோதா பிளாகை என்னவோ ஹிந்து, எக்ஸ்ப்ரெஸ் ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டாயே?

இன்னும் ஹெலிகாப்டர் ஏத்திக் கொல்லும் அளவுக்கு எல்லாம் நான் வளரலை, கவலை வேண்டாம்.