காக்கா-வடை கதைய ரீமேக் பண்ணச் சொல்லி சில டைரேக்டர்களிடம் கேட்டோம்.
ரொம்ப மெது..வடை!
டைரக்டர்: சேரன்
கதை: பாட்டிக்கிட்டே இருந்து வடையை எடுத்துட்டுப் போய் காக்கா மரத்துலே உட்காருது. அடுத்த நாலு மணி நேரம் பாட்டியும் காக்கையும் லெட்டர் அனுப்பிகிட்டே இருக்காங்க. இடையிலே போஸ்ட்மன் நரியுடைய பழைய டாவுகள் ஏழு பெரும் பிளாஷ் பேக்கிலே வர்றாங்க. அப்புறம் இண்டர்வல்.
அப்புறம?
அதுவரைக்கும் எடுத்தா போதும் சார், அதுக்கப்புறம் தியேட்டரிலே யாருமே இருக்க மாட்டாங்க.
மசாலா வடை!
டைரெக்டர்: ஷங்கர்
கதை: நிலாவிலே பாட்டி வடை சுடுறாங்க. ஒரு லட்சம் காக்கைகள் வடைகளை திருடிட்டு போயிடுதுங்க. நரி வந்து அநியாயம் செய்யுற ஒவ்வொரு காக்காயையும் தேடித் புடிச்சு பேசியே கொல்லுது. "அஞ்சு அஞ்சு காக்கா அஞ்சு அஞ்சு வடையா திருடினா தப்பா"ன்னு கேக்கும் பாருங்க, தியேட்டரிலே அப்ப்ளாஸ். பத்து கோடி பட்ஜெட்டிலே ஒரு பாட்டு. மிச்ச செலவெல்லாம் நிலாவுக்குப் போனப்புறம் பாத்துப்போம். ஆமாம், மொத்த படமும் நிலாவுலே தான் நடக்குது.
காக்கா! காக்கா!
டைரெக்டர்: கமல்
கதை: வடைகளைப் பத்தி ஆராய்ச்சி செய்யுற ஒரு பாட்டி. அவங்க கிட்டே இருந்து அதை திருட, அமெரிக்க உளவு நிறுவனம் காக்கையை அனுப்புது. நேர்மையான போலீஸ் ஆபீசரா நரி. கிளைமக்சிலே நரி குறி பாத்து சுட, காக்கா வடைய கீழே எண்ணைச் சட்டியிலே போட்டுடுது. உலகத்தை காப்பாத்தின நரிக்கு ஒபாமா கப்பு குடுக்கிறார்.
படத்தின் ஹீரோ கமல் என்பதால் பாட்டி, நரி, காக்கா வேஷம் தவிர மரம், எண்ணைச் சட்டி , கரண்டி வேஷம் கூட அவரே போடுறார். வடை வேஷத்துலே ஒரு பாட்டு கூட பாடுறார்.
கரிசல்காட்டு வடை!
டைரெக்டர்: பாரதிராஜா
கதை: என் இனிய தமிழ் மக்களே!..
சரி, கதைக்கு வருவோம்!
இந்தக் கரிசல் பூமியிலே ஒரு தமிழச்சி வடை சுடுகிறாள். அதை இந்த மண்ணில் பிறந்த ஒரு காக்கா தூக்கிட்டு போகிறது. இடையிலே வரப்புத் தகறாருலே காக்கா வடைய பாட்டி மேல போட, பாட்டி விழ, போலீஸ் காக்காய அரெஸ்ட் பண்ணிட்டு போகுது. முறைப்பொண்ணு நரி போலீஸ் ஜீப்புக்குப் பின்னாலேயே ஓடிட்டே போகுது.
இன்னும் அந்த மண்வாசனை மிக்க வடை, தன்னை சுட்ட பாட்டிக்காகவும், பாட்டிகிட்டே இருந்து சுட்ட காக்காவுக்காகவும் இந்தக் கரிசல் மண்ணிலே காத்துக் கிட்டே.......இருக்கு.
குளோஸ்-அப்பில் வடையை காட்டுறோம்.
A film by Baarathiraaja
அவார்ட் நமக்கு தான் சார்!
ஜெயமோகன் புத்தகங்கள் கிழக்கில்
10 hours ago